பாகிஸ்தானில் கராச்சி நகரிலிருந்து ராவல்பிண்டிக்குச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில் 65 பேர் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பயணிகள் காலை உணவு சமைப்பதற்காக உபயோகித்த சிலிண்டர்கள் இரண்டு வெடித்ததனால் இத்தீ விபத்து ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூன்று பெட்டிகளுக்குத் தீ பரவியதாகவும் சம்பவத்தில் 39 பேர் காயமடைந்திருப்பதாகவும் இது வரை வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த ரயில் சேவை நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதாகவும் பல ஊர்களைக் கடந்து சுமார் 25.30 மணி நேரம் ஒரு பக்க சேவைக்காக பயணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment