1962ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்ட மாகொல முஸ்லிம் அனாதை நிலையம் 57 வது வருடத்தை பூர்த்தி செய்கிறது.
அல்ஹாஜ் ஜாபிர் ஹாஜியார் அவர்களின் தலைமைத்துவ வழிகாட்டலில் இயங்கிவந்த இந் நிலையம் அதன் 57 வது நிறைவு விழா விழாவினை எதிர்வரும் 13ம் திகதி ஞாயிற்றுக்கிமை மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தில் மிகவிமர்சையாக நடைபெற பழைய மாணவர் சங்கத்தினர் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கல்வி மற்றும் மார்க்க கல்வி என இருபெரும் பிரிவாக இயங்கிவரும் இந் நிலையத்தில் இருந்து பல பட்டதாரிகளும், ஆலிம்களும், மௌலவி ஹாபிழ்களும் இன்று நாடளாவியரீதியில் சேவையாற்றிவருவது குறிப்பிடத்தக்கது.
மேற்படி விழாவில் சகல பழைய மாணவர்களும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13-10-2019) தவறாது கலந்து சிறப்பிக்குமாறு சங்க நிகழ்ச்சி ஏட்பாட்டுக்குழு கேட்டுக்கொள்கின்றது.
-Cader Munawwar
-Cader Munawwar
No comments:
Post a Comment