தான் ஜனாதிபதியானால் அமைச்சரவையின் எண்ணிக்கையை 30 ஆகக் குறைக்கப் போவதாகவும் வேறு ராஜாங்க, இலாகா இல்லாத அமைச்சர்கள் என்ற பதவிகள் எல்லாம் யாருக்கும் தரப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கிறார் மக்கள் சக்தி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க.
30 அமைச்சர்களுக்கு 30 பிரதியமைச்சர்கள் என்பதே வரையறை எனவும் அளவுக்கும் தேவைக்கும் அதிகமாக கட்டியெழுப்பப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகைகளை நூலகம் அல்லது அருங்காட்சியகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமூகங்கள் மத்தியில் அடிப்படைவாதம் தலையெடுக்காமல் இருப்பதற்கான சமூகக் கட்டமைப்பையும் உருவாக்கவுள்ளதாக அநுர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment