கடந்த நான்கரை வருடங்களில் தமது அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள கூட்டாட்சி அரசாங்கம் 26 பில்லியன் டொலர் கடன் எடுத்திருப்பதாக தெரிவிக்கிறார் மஹிந்த ராஜபக்ச.
எனினும், இந்தக் கடன் ஊடாக நாட்டில் நிலையான அபிவிருத்தி எதுவும் காணப்படவில்லையெனவும், வருமானத்தைத் தரக்கூடிய முதலீடுகளும் எதுவும் இல்லையெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆட்சியைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காகவே இவ்வாறு அரசு கடனுக்கு மேல் கடனைப் பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவிக்கின்றமையும், மஹிந்த பட்ட கடன்களை அடைக்கவே தாம் கடன் படுவதாக கூட்டாட்சி அரசு தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment