நவம்பர் 18ம் திகதியே தேர்தல் முடிவு: தேசப்பிரிய - sonakar.com

Post Top Ad

Wednesday, 16 October 2019

நவம்பர் 18ம் திகதியே தேர்தல் முடிவு: தேசப்பிரிய


நவம்பர் 16ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் 18ம் திகதியே வெளியிடப்படும் என தெரிவிக்கிறார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய.



இம்முறை வேட்பாளர்களின் எண்ணிக்கை 35ஆக இருக்கின்ற அதேவேளை வாக்குப் பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2 அடி நீளமான வாக்குச் சீட்டிலேயே இம்முறை வாக்குகள் பதிவாகவுள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் தாமதமாகலாம் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டிந்தது.

இந்நிலையில், இறுதி முடிவுகள் 18ம் திகதி வெளியிடப்படும் என தேசப்பிரிய தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment