1 மில்லியன் அதிக வாக்குகள் பெற்று கோட்டா வெல்வார்: விஜேதாச - sonakar.com

Post Top Ad

Tuesday, 29 October 2019

demo-image

1 மில்லியன் அதிக வாக்குகள் பெற்று கோட்டா வெல்வார்: விஜேதாச

so3HtWt

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 10 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோட்டாபே ராஜபக்ச வெல்வார் என தெரிவிக்கிறார் அண்மையில் அவரது அணியில் இணைந்து கொண்ட விஜேதாச ராஜபக்ச.



ரணில் - மைத்ரி கூட்டாட்சியில் நீதியமைச்சராக இருந்த விஜேதாச, மஹிந்த அரசின் ஊழல் விவகாரங்கள் மீதான விசாரணைகளைத் தடுத்து வந்ததோடு கோட்டாபேவின் கைதையும் தடுத்துள்ளமையை தற்போது தேர்தல் பிரச்சாரங்களிலும் தெரிவித்து வருகிறார்.

இதே காரணத்திற்காக அவரது அமைச்சுப் பதவி முன்னர் பறிக்கப்பட்டிருந்த அதேவேளை தற்போது கோட்டாபே அணியில் இருக்கும் அவர் எதிர்வரும் தேர்தலில் கோட்டா 10 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெறப் போவதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment