வியாழனன்று 'பாரம்பரிய' முறையில் UNP வேட்பாளர் அறிவிப்பு - sonakar.com

Post Top Ad

Tuesday, 24 September 2019

வியாழனன்று 'பாரம்பரிய' முறையில் UNP வேட்பாளர் அறிவிப்பு



எதிர்வரும் வியாழன் 26ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரியத்தின் அடிப்படையில் கூடவுள்ள செயற்குழு, அன்றைய தினம் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து அறிவிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சி தகவல் வெளியிட்டுள்ளது.



வேட்பாளரை முடிவு செய்ய நியமிக்கப்பட்ட நால்வர் கொண்ட குழு அன்றைய தினம் தமது பரிந்துரையை செயற்குழுவிடம் முன் வைத்ததும் அது தொடர்பில் ஆராய்ந்து, தேவையேற்படின் வாக்கெடுப்பு நடாத்தப்பட்ட பின்னரே வேட்பாளர் தீர்மானிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

வேட்பாளர் அறிவிப்பு தாமதம் குறித்து அண்மையில் பதிலளித்த சஜித் பிரேமதாச, மாமன் - மச்சான் ஒன்று கூடி முடிவெடுக்க இது குடும்பம் இல்லை, கட்சியென்பதால் அதற்கான நடைமுறைகள் உள்ளது என விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment