
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இவ்வாரம் அறிவிக்கப்படவுள்ளதாக பாரிய எதிர்பார்ப்பு உருவாக்கப்பட்டுள்ள நிலையில் செயற்குழுவில் இரகசிய வாக்கெடுப்பு நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் கட்சி முக்கியஸ்தர்களுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடாத்திய ஆலோசனைக்கூட்டத்தின் பின்னரே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை தனது தலைமையைத் தக்க வைத்துக் கொள்வதே அவரது பிரதான இலக்காக இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment