ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருக்கும் வரை அக்கட்சிக்கு விமோசனம் இல்லையென தெரிவிக்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிறி ஜயசேகர.
தான் கட்சியை விட்டு வெளியேறியது மீண்டும் செல்வதற்கில்லையென தெரிவிக்கும் அவர் பெரமுனவுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் ஜே.வி.பியோடு இணையக் கூடிய சாத்தியக் கூறு இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
ரணில் விக்கிரமசிங்க அரசியலில் இருக்கும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் நிலை இவ்வாறே இருக்கும் என அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment