ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வது ஐக்கிய தேசியக் கட்சியின் விவகாரம் அன்றி அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித நிபந்தனையும் விதிக்கவில்லையென தெரிவிக்கிறார் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன்.
தமது தரப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ள நிலையில் வேட்பாளர் தெரிவில் தலையிடப் போவதில்லையென சம்பந்தன் விளக்கமளித்துள்ளார்.
இன்றைய தினம் அலரி மாளிகையில் சுமார் ஒரு மணிநேரம் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
No comments:
Post a Comment