18 வருடங்களாக ஆப்கனிஸ்தானில் அமெரிக்கா நடாத்தி வரும் யுத்தத்தை நிறைவுக்குக் கொண்டு வரும் வகையில் தலிபான்களுடன் இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தைகளை திடீரென இரத்துச் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
ஆப்கன் ஜனாதிபதி மற்றும் தலிபான் தலைவர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை இடம்பறவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தற்போது, அப்பேச்சுவார்த்தை இடம்பெறாது என ட்ரம்ப் தன்னிச்சையாக அறிவித்துள்ளதன் பின்னணியில் மீண்டும் பிராந்தியத்தில் பதற்றம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment