சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளரானால் அவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒத்துழைக்கும் என எந்த வாக்குறுதியும் வழங்கப்படவில்லையென அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் பிரேமதாச தொடர்பில் மைத்ரிபால சிறிசேன தொடர்ந்தும் நல்லெண்ணம் வெளியிட்டு வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவருக்கு ஆதரவளிக்கும் எனவும் ஊகங்கள் நிலவுகின்றன. இது தொடர்பில் விளக்கமளித்தே நா.உ வீரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் வேட்பாளரை நிறுத்தவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment