'மொட்டு' சின்னத்தை மாற்றுங்கள்: SLFP - SLPP புதிய சர்ச்சை - sonakar.com

Post Top Ad

Sunday, 1 September 2019

'மொட்டு' சின்னத்தை மாற்றுங்கள்: SLFP - SLPP புதிய சர்ச்சை



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுன இடையே தேர்தல் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ள போதிலும் மொட்டுச் சின்னத்தை ஏகமானதாக அங்கீகரிக்க சுதந்திரக் கட்சி தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.



இரு கட்சிகளும் இணைந்துள்ள நிலையில் சின்னமும் மாற்றப்பட வேண்டும் என்பது சுதந்திரக் கட்சியின் கோரிக்கையாக இருக்கிறது. எனினும், மொட்டுச் சின்னத்திலேயே கோட்டாபே போட்டியிடுவார் என பெரமுன தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பில் தற்போது உறுப்பினர்கள் மத்தியில் சர்ச்சைக் கருத்துகள் பரிமாறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment