ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர்களாகி தற்போது வேறு கட்சிகளுடன் இணைந்து பணியாற்றும் ஐவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அதற்குரிய கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார் அக்கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர.
பௌசி, எஸ்.பி. திசாநாயக்க, டிலான் பெரேரா, விஜேமுனி சொய்சா, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோருக்கே இவ்வாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதேவேளை, சில சு.க பிரதேச சபை உறுப்பினர்களுக்கு எதிராகவும் இவ்வாறு ஒழுக்காற்று விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment