2015 - 2017 வருடங்களின் MacBook Pro வகை 15" மடிக்கணிணிகளை ஸ்ரீலங்கன் விமானத்தில் கைப் பையிலோ அல்லது விமானப் பொதியிலோ கொண்டு செல்ல அனுமதிக்கப் போவதில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வகை மடிக்கணிணி பற்றரிகள் அதிக வெப்பம் காரணமாக தீப்பற்றிக் கொள்ளும் அபாயமிருப்பதாகக் கூறி குறித்த கால எல்லைக்குள் விற்பனை செய்யப்பட்ட கணிணிகளை மீளப் பெற்று அதற்குரிய மாற்றீட்டை வழங்குவதற்கான அறிவிப்பு ஜுலை மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே பாதுகாப்பு கருதி ஸ்ரீலங்கன் தற்போது இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதேவேளை, அப்பள் நிறுவனத்தினூடாக புதிய பற்றரிகளை மாற்றிக் கொண்டதற்கான ஆதாரம் இருப்பின் அனுமதிக்கப் போவதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment