இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரை விடுவிக்குமாறு கோரி முஸ்லிம் அமைப்புகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவ்வமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், தேசிய சூரா கவுன்சில், அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை, அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், இலங்கை மலாயர் சம்மேளனம் என்பன இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கைது முஸ்லிம் சமூகத்துக்குள் பாரிய 'கலக்கத்தை' ஏற்படுத்தியுள்ளதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment