ISIS தொடர்பு வைத்திருந்த காத்தான்குடி வர்த்தகருக்கு விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Thursday, 19 September 2019

ISIS தொடர்பு வைத்திருந்த காத்தான்குடி வர்த்தகருக்கு விளக்கமறியல்



ISIS அமைப்போடு நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் காத்தான்குடியைச் சேர்ந்த வர்த்தகர் அஹமட் முஹமது அர்ஷாட் என அறியப்படும் நபரை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.



ஏலவே, ஒரு மாத காலம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் குறித்த நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.  கிங்ஸ்பரி ஹோட்டல் தாக்குதலின் பின்னணியிலான விசாரணைகளிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், ISIS அமைப்போடு இணையம் ஊடாக தொடர்புகளைப் பேணும் வழி முறைகள் தொடர்பில் இன்டர்போல் மற்றும் அமெரிக்காவின் தகவல்களை வழங்கி விசாரணைக்கு உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment