நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதில் மாற்றுக் கருத்தில்லை: சஜித் - sonakar.com

Post Top Ad

Friday 27 September 2019

நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதில் மாற்றுக் கருத்தில்லை: சஜித்


ஐக்கிய தேசியக் கட்சி 2015ம் ஆண்டு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளுக்கமைவாகவும் கட்சியின் கொள்கைகளின் அடிப்படையிலுமே தான் செயற்படவுள்ளதாக தெரிவிக்கின்ற அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.



வேட்பாளர் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதையடுத்து அவர் நடாத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்தே இவ்வாறு தெரிவித்த அவர், பெரமுனவைத் தோற்கடிக்க வேண்டிய இந்த போராட்டத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்குத் தலைமை தாங்கவுள்ளதாகவும் எனினும் தனது பாதை ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக அமையாது எனவும் தெரிவித்துள்ளார்.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்தும் பிரதமராகவும், தலைமைப் பொறுப்பிலும் இருப்பார் என அகில விராஜ் காரியவசம் விளக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment