தனக்கு விருப்பமான அரசியல் சூழ்நிலை இல்லாவிட்டால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென தெரிவிக்கின்ற விஜேதாச ராஜபக்ச, தான் அரசியலை விட்டு ஒதுங்கி தன்னால் முடிந்த சமூக சேவைகளை செய்ய எண்ணியுள்ளதாக தெரிவிக்கிறார்.
கூட்டாட்சியில் சர்ச்சைப் பேர்வழியாக உருவான விஜேதாச ராஜபக்ச, மஹிந்த குடும்பத்தின் வழக்குகளைத் தாமதப்படுத்துவதாக குற்றஞ்சாட்டப்பட்டு நீதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தல் பற்றியும் கருத்துரைத்துள்ள அவர், எந்த வேட்பாளராக இருந்தாலும் அவரது கடந்த காலத்தை வைத்தே தான் முடிவெடுக்கப் போவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment