டி.ஏ ராஜபக்ச நினைவக புனரமைப்பு முறைகேடு விவகாரத்தில் தனக்கெதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கு பிழையானது எனக் கூறி கோட்டாபே ராஜபக்ச முன் வைத்த ஆட்சேபனை மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த வழக்கினை விசேட உயர் நீதிமன்றம் ஊடாக தொடர்ச்சியாக விசாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கோட்டாபே இவ்வாறு ஆட்சேபித்திருந்தார்.
எனினும், ஐவர் கொண்ட நீதிபதிகள் குழு இவ்வாட்சேபனை மனுவை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment