தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தான் எந்தக் காரணம் கொண்டும் பின் வாங்கப் போவதில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க.
பெரமுன வேட்பாளராக கோட்டாபே ராஜபக்ச நியமிக்கப்பட்ட தருணத்திலிருந்து மஹேஷின் வருகை எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று அவரும் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
கோட்டாபே ராஜபக்சவை விட அண்மைக்காலமாக இராணுவத்தில் பணியாற்றிய தளபதி எனும் வகையில் மஹேஷ் சேனாநாயக்க ஊடாக சிங்கள வாக்குகள் சிதறும் என அவதானிகள் கணிப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment