சஜித் பிரேமதாசவே வேட்பாளர்: அவர் வெற்றி பெறுவதும் உறுதி: அசாத் - sonakar.com

Post Top Ad

Monday 23 September 2019

சஜித் பிரேமதாசவே வேட்பாளர்: அவர் வெற்றி பெறுவதும் உறுதி: அசாத்



ஐக்கிய தேசிய கட்சி என்பது ஒரு ஜனநாயக் கட்சியாகும். அது ஒரு குடும்பக் கட்சி அல்ல. ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழு, பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்கள் என சகலருடைய  ஆசிர்வாதத்துடன் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளார். அவர் நிச்சயமாக பெரும்பான்மை, சிறுபான்மையின மக்களுடைய அதிகப்படியான ஆதரவில் அமோக வெற்றி பெறுவார் என்று முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.



அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இன்று ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் வேட்பாளராக கோட்டாபே  ராஜபக்ஷ களமிறங்கியுள்ளார்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வேறு சின்னத்தில் கேட்கலாம் என்று கூறியும் அவர்கள் கேட்கவில்லை. நாங்கள் மொட்டுச் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்ற தோரணையில் களமிறங்கி விட்டனர். வேட்பாளருக்கான கட்டுப்பணத்தையும் செலுத்தி விட்டார்கள். அதே போன்று மக்கள் விடுதலை முன்னணியினரும் கட்டி முடித்து விட்டுள்ளார்கள். 

இங்குள்ள ஒரே ஒரு பிரச்சினை என்னவென்றால் ஐக்கிய தேசிய கட்சி மட்டும் ஒரு வேட்பாளரை நிறுவத்துவதில் தாமதித்துக் கொண்டிருக்கின்றனர். அது ஒரு ஜனநாயக் கட்சியாகும். உண்மையிலேயே அந்தக் கட்சிக்குள் அவர்  இவர் எனப் பலர் போட்டியிடுவதற்கான  சந்தர்ப்பம் அதிகம் இருக்கின்றன. 

எனினும் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி அவ்வாறு இல்லை.  அவர்களுடைய குடும்பம் தீர்மானிப்பது யார் வேட்பாளர் என்று. மக்கள் தீர்மானிப்பதோ, அவர்களுடன் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிப்பதோ, பிரதேச சபை உறுப்பினர்கள் தீர்மானிப்பதோ, மாகாண சபை உறுப்பினர்கள் தீர்மானிப்பதோ இல்லை. மஹிந்த ராஜபக்ஷ எவர் பெயரைச் சொல்லுகின்றாரோ அவர் தான் ஜனாதிபதி வேட்பாளர். அது குடும்பத்திற்குள் இருந்து ஒருவர் தெரிவு செய்யப்பட்டால் மட்டும் தான் ஊழல் மோசடிகளை பாதுகாத்துக் கொள்ள முடியும்.  

ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு அந்தப் பிரச்சினை இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஜனநாயகக் கட்சியாகும். அந்த கட்;சியின் ஜனநாயகத் தன்மையை இல்லாமற் செய்வதற்கு பிரதமர் ரனில் விக்கிரமசிங்க எவ்வளவு முயற்சி செய்தாலும் ஜனநாயாக வழிமுறைக்குச் சென்று கடைசியாக பாராளுமன்ற குழுவினர்கள் ஒரு தீர்மானத்தையும் மத்திய செயற்குழு ஒரு தீர்மானத்தையும்  ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுடைய  தீர்மானத்தையும் ஒத்த ஒருவராக சஜித் பிரேமதாச வேட்பாளராக களமிறக்குவதற்கு ஏற்கெனவே ஆதரவு வழங்கி விட்டார்கள்.  அதில் மாற்றமும் இடம்பெறுவதற்கு சந்தர்ப்பம் இல்லை.  யார் என்ன கூத்துப் போட்டாலும்  சஜித் பிரேமதாச தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவார்.

இந்நாட்டைப் பொறுத்வரையிலும் 30 விகிரமான வாக்குகள் சிறுபான்மை மக்கள் மத்தியில் உள்ளன.  70 விகிதமான வாக்குகள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் உள்ளன. இந்த 70 விகிதமான வாக்குகள்; மூன்று பிரிவுகளாகப் பிரியும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாருக்கு ஆதரவளிப்பது என்பது இன்னமும் தீர்மானம் எடுக்க வில்லை.  இந்த வாக்குகள் சஜிதுக்கும் கோட்டாவுக்கும்  அநுரவுக்கும் மூன்றாகப் பிரிந்து போகும். ஆரம்பத்தில்  சிறுபான்மையின மக்களுடைய வாக்குகள் என சஜித் பிரேமதாசவுக்குரிய  ஆரம்ப வாக்குகள் என  28 விகிதம் கிடைக்கும். அவரது ஆரம்பம் வாக்குகள் 28 விகிதத்தில் இருந்தே ஆரம்பமாகும். இந்த அதிகப்படியான வாக்குகளின் மூலம்  சஜிதுடைய வெற்றி நிச்சயமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மஹிந்த ராஜபக்ஷ  ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கி இருப்பாராயின் அது வேறு மாதரி. கோட்டாபே ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியதில் அவர்களுடைய கட்சிக்குள்ளே அதிருப்திகள் இருக்கின்றன. எனவே இந்த தேர்தல் கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும்  புதுமையான செய்திகளை நாட்டு மக்கள் எல்லோரும் அறிந்து கொள்வார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

-இக்பால் அலி  


No comments:

Post a Comment