நிகாப் தடை நீக்கம், முஸ்லிம் அரசியல்வாதிகளின் அழுத்தத்திலேயே இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் மஹிந்த அமரவீர, இது தொடர்பில் தேவையான இடங்களில் எல்லாம் தமது தரப்பு கேள்வியெழுப்பவுள்ளதாக தெரிவிக்கிறார்.
இத்தடை நீக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு போதைப் பொருள் கடத்தல், தீவிரவாத தாக்குதல்கள் போன்ற விடயங்கள் இடம்பெறலாம் எனவும் ஏனைய சமூகத்தவர்களும் இதனை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கின்ற அமரவீர, இது தேசிய பாதுகாப்புக்கு சவாலாகும் எனவும் தெரிவிக்கிறார்.
தடை நீக்க முன்பதாக அது நாடாளுமன்றில் விவாதிக்கப்படும் என தாம் எதிர்பார்த்திருந்ததாகவும் எனினும் அரசின் தேவைக்கமைவாக அதனை நீக்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment