யானைகள் இறக்கின்றனவா? பலி கொடுக்கிறார்களா? விமல்! - sonakar.com

Post Top Ad

Monday, 30 September 2019

யானைகள் இறக்கின்றனவா? பலி கொடுக்கிறார்களா? விமல்!


தொடர்ச்சியாக ஏழு யானைகள் இறந்துள்ளமை தொடர்பில் தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.



இம்மரணங்கள் இயற்கையானதா அல்லது பலி கொடுக்கப் படுகின்றனவா? என்பது தொடர்பில் தெளிவுபடுத்தல் அவசியப்படுவதாக தெரிவிக்கும் அவர், சஜித் பிரேமதாசவின் அரசியல் தேவைக்காக ஏதாவது பூஜை நடக்கிறதா என தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கிறார்.

ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் அதன் அடிப்படையிலேயே தனக்கு சந்தேகமாக உள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment