முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல தொகுதி அமைப்பாளருமான அதிமேதகு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் முயற்சியில், அத்தனகல்ல பிரதேச செயலகப்பிரிவிலுள்ள நிட்டம்புவ, மாத்தலான பிரதேசத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் நிர்மாணிக்கப்பட்ட "கிதுள்கொலதெனிய ஏரி" இன்றைய தினம் (12) முன்னாள் ஜனாதிபதி அவர்களினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.மோகனராஜா உள்ளிட்ட அதிகாரிகள், சுதந்திரக் கட்சியின் கஹட்டோவிட்ட வட்டார அமைப்பாளர் அல் ஹாஜ் ருஷ்தி உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள், பிரதேச மக்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
-கஹட்டோவிட்ட ரிஹ்மி
No comments:
Post a Comment