ஈஸ்டர் தினம் இலங்கையில் இடம்பெற்ற பாரிய தாக்குதல் போன்று பாரிய தாக்குதல்கள் இடம்பெறப் போவதாக சமூக வலைத்தளங்களில் போலி செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கும் படியும் அறிவுறுத்துகிறது பாதுகாப்பு அமைச்சு.
முன்னாள் இராணுவத்தினரும் இணைந்து பாரிய தாக்குதல் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக பல சிங்கள ஊடகங்கள் மற்றும் சமூக வலைளத்தளங்களில் பரவி வரும் செய்தி குறித்தே பாதுகாப்பு அமைச்சு இவ்வாறு விளக்கமளித்துள்ளது.
இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment