தனது பதவிக்காலத்தை ஒரு வருடம் நீடிக்க முடியுமா என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நீதிமன்ற அபிப்பிராயம் அறிய முயற்சித்துள்ள நிலையில், தேர்தல் நடக்கும் என்பது வெறும் எதிர்பார்ப்பு தானே தவிர இன்னும் தீர்மானிக்கப்படவில்லையென தெரிவிக்கிறார் ரஞ்சன் ராமநாயக்க.
இந்நிலையில், தமது கட்சியின் வேட்பாளரை அறிவிக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித அவசரமுமில்லையென்பது அவரது விளக்கமாக உள்ளது.
கோட்டாபே மற்றும் அநுர குமார திசாநாயக்க பெயரிடப்பட்டுள்ள போதிலும் இன்னும் ஜனாதிபதி தேர்தல் நடப்பது உறுதியாகவில்லையென ரஞ்சன் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment