
கோட்டாபே ராஜபக்சவுக்கான மக்கள் ஆதரவை சீர்குலைக்க முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்கவை தேர்தலில் போட்டியிட வைக்க முயற்சிகள் நடப்பதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
இதேவேளை, முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவும் போட்டியிடப் போவதாக கடந்த வாரம் தகவல் பரவி வந்ததோடு மக்கள் விரும்பினால் தான் போட்டியிடுவேன் என அவரும் தெரிவித்திருந்தார்.
ஈஸ்டர் தாக்குதலின் பின் இராணுவ தளபதியாக மஹேஷ் சேனாநாயக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், அவரது பேச்சுக்கள் ஊடாக தேசிய மட்டத்தில் அவர் தொடர்பில் நல்லெண்ணம் உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment