ஒரு வாரத்தில் தாமரைக் கோபுரம் மக்கள் பாவனைக்கு - sonakar.com

Post Top Ad

Monday, 16 September 2019

ஒரு வாரத்தில் தாமரைக் கோபுரம் மக்கள் பாவனைக்கு


ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்ட தாமரை கோபுரம் இன்னும் ஒரு வார காலத்தில் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


1500 வாகனங்கள நிறுத்தக்கூடிய வசதியுடன் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இக் கோபுரம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் 356 மீற்றர் உயரமானது.

400 பேர் அமரக்கூடிய மாநாட்டு மண்டபம் திருமண மண்டபம், ஆடம்பர அறைகள், 6 அதி சொகுசு அறைகள்  அத்துடன் தொலைத் தொடர்பாடல் அருங்காட்சியகம் மற்றும் உணவு விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-ஏ.எஸ்.எம்.ஜாவித்

No comments:

Post a Comment