அளுத்கமயிலிருந்து எல்பிட்டிய பயணித்த இ.போ.ச பேருந்துக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 41 வயது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சக பயணி போல் பயணித்த நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ள அதேவேளை சம்பவத்தில் ரஞ்சித் ஜயவர்தன என அறியப்படும் நபர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
ஊரகஸ்மன்ஹந்தியவைச் சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளதுடன் எல்பிட்டிய பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
No comments:
Post a Comment