ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - பெரமுன இடையே கட்சிச் சின்னம் பற்றிய இழுபறி நிலவும் நிலையில் அப்போராட்டத்தைக் கைவிட்டு வேட்பாளரை ஆதரிக்க முன் வர வேண்டும் என தயாசிறிக்கு அறிவுரை வழங்கியுள்ளார் சுசில் பிரேமஜயந்த.
இரு கட்சிகளும் சமசரத்துக்கு வந்துள்ள போதிலும் மொட்டுச் சின்னத்தில் வேட்பாளரை அனுமதித்து ஆதரவளிப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மதிப்பைக் குறைக்கும் என தயாசிறி தரப்பு நம்புகிறது. இந்நிலையிலேயே இது தொடர்பில் இழுபறி நிலவுகின்ற போதிலும் பெரமுன விட்டுக்கொடுப்புக்குத் தயாரில்லையென தெரிவிக்கிறது.
ஆயினும், இதனைப் பொருட்படுத்தாது வேட்பாளரைப் பார்த்து ஆதரவளிக்க வேண்டும் என சுசில் அறிவுரை வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment