
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சி வெற்றிபெறக் கூடிய பக்கம் முகாமிட்டிருப்பதாக தெரிவிக்கிறார் மனோ கணேசன்.
இந்நிலையில், கோட்டாபே ராஜபக்ச பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயம் தமக்கில்லையெனவும் புதன்கிழமையளவில் வேட்பாளர் அறிவிப்பு வரும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
இதேவேளை, முல்லைத்தீவில் இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவையும் மீறி ஞானசாரவின் தலைமையில் பிக்குகள் கோயில் வளாகத்துக்குள் அடாவடியாக பௌத்த துறவியொருவரின் உடலத்தை எரித்தமை தொடர்பில் இதுவரை மனோ கணேசன் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment