குருந்துகஹஎல முஸ்லிம் வித்தியாலயத்தின் பொன் விழா நிகழ்வுகள் ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Thursday, 12 September 2019

குருந்துகஹஎல முஸ்லிம் வித்தியாலயத்தின் பொன் விழா நிகழ்வுகள் ஆரம்பம்


கட்டுகஸ்தோட்டை கல்வி  வலயத்திற்குட்பட்ட  அக்குறணை குருந்துகஹஎல முஸ்லிம் வித்தியாலயத்தின்  50 ஆண்டு  நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் பொன் விழா நிகழ்வுகள் நேற்று (11)  முதல் ஆரம்பமானது.


இப்  பாடசாலையின் பொன் விழாவை முன்னிட்டு  மாணவர்களின் ஆக்கங்கள்  உள்ளடக்கிய  கன்காட்சியும்  இடம்பெற்று வருகின்றது. 

பிரபல  சமூகசேவகரான  டீ.ஜீ.எஸ் எம்.எம். நிஸைஹார் அவர்களினால்  பாடசாலைக்காக  நிர்மானிக்கப்பட்ட  அதிபர் காரியாலயம் திறத்துவைக்கப்பட்துடன் மேலும்  சிலரின் பங்களிப்பால் நிர்மானிக்கப்பட்ட நூலக கட்டிடமும்  இதன் போது திறந்துவைக்கப்பட்டது. 

பாடசாலை அதிபர் திருமதி ஏ.எஸ் நிஸ்ரியா அவர்களது தலமையில் இடம்பெற்ற வைபவத்திற்கு கட்டுகஸ்தோட்டை கல்வி  வலயத்தின் உதவிப் பனிப்பாளர் எம்.எஸ்.எம். ராஸீக், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

-மொஹொமட் ஆஸிக்


No comments:

Post a Comment