கடந்த வெள்ளிக்கிழமை அக்குரஸ்ஸயில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, இரு பொலிசார் காயமுற்ற சம்பவத்தின் பின்னணியில் இரு இராணுவ சிப்பாய்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூவர் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் அதனைத் தடுக்க முயன்ற பொலிசார் மீதே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாணந்துறை இராணுவ முகாமைச் சேர்ந்த இரு இராணுவ சிப்பாய்கள் உட்பட ஐவர் இவ்விடயத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment