ஐக்கிய சாடுகள் சபையில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணவத்தினரை ஈடுபடுத்துவதை நிறுத்திக் கொண்டுள்ளதாக ஐ.நா சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் நியமனத்தின் எதிரொலியாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ள அதேவேளை இலங்கை அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இப்பின்னணியில் வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகள் நாளைய தினம் ஐ.நாவுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment