மைத்ரியே ஐக்கிய தேசியக் கட்சியை குழப்புகிறார்: ஹிருனிகா - sonakar.com

Post Top Ad

Friday, 6 September 2019

மைத்ரியே ஐக்கிய தேசியக் கட்சியை குழப்புகிறார்: ஹிருனிகா


ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது ஜனாதிபதி மைத்ரிபாலவின் செயல் என விசனம் வெளியிட்டுள்ளார் ஹிருனிகா.



சஜித்தையும் - ரணிலையும் பிளவு படுத்துவதூடாக தனது காரியத்தை சாதித்துக் கொள்ள மைத்ரிபால சிறிசேன இவ்வாறு பிரிவினைகளை உண்டுபண்ணியுள்ளதாக தெரிவிக்கும் அவர் தமது கட்சித் தலைவரும் பிரதித் தலைவரும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் ஜனாதிபதி தேர்தலின் முடிவை பிரதிபலிக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment