தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் வெள்ள சூழ்நிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளும் இரு தினங்களுக்கு பூட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெலிகம பகுதியில் வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
கொலதென்ன, வெலிபி;டிய, கபுவத்த பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள மர்கஸ் ஊடாக உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment