சட்டவிரோதமாக சடலம் ஒன்றைப் புதைத்த குற்றச்சாட்டில் கைதான பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும உட்பட அறுவருக்கும் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா இரண்டு லட்ச ரூபா சரீரப் பிணைகளிரண்டில் அனைவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி இவ்வாறு செயற்பட்டதாக குறித்த நபர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதுடன் வழக்கின் விசாரணை டிசம்பர் 10ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment