நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க - சஜித் பிரேமதாச இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் கூட்டணி கட்சிகளுக்கு எதுவும் இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லையென தெரிவித்துள்ளார் மு.கா தலைவா ரவுப் ஹக்கீம்.
ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர், வெற்றி பெறக்கூடிய மக்கள் ஆதரவுள்ளவராக இருத்தல் அவசியம் என தெரிவிக்கின்ற அவர், சிறுபான்மை கூட்டணி கட்சிகளின் முன்மொழிவு விரைவில் ரணிலிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, தானே ஜனாதிபதி வேட்பாளர் எனும் அடிப்படையில் சஜித் பிரேமதாச தனது பிரச்சார நடவடிக்கைகளை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment