பொது சேவை நிறுவனங்கள் பலவற்றில் இடம்பெற்று வரும் வேலை நிறுத்தங்கள் பற்றி ஆராய்ந்து தக்க நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்திலேயே இம்முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அமைச்சர்கள் மங்கள சமரவீர, ராஜித சேனாரத்ன, மத்தும பண்டார, அசோக அபேசிங்க ஆகியோர் இவ்வுபகுழுவில் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment