ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரிய அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வரும் நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தனக்குப் பேசுவதற்கான அனுமதி தந்த சபாநாயகரை 'அதி மேதகு ஜனாதிபதியென....' அழைத்து கரு ஜயசூரியவின் அதிருப்தியை சம்பாதித்துள்ளார் தயாசிறி ஜயசேகர.
உடனடியாக அதற்கு பதிலளித்த கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் கேலிக் கூத்து வேண்டாம், கண்ணியத்தைக் காப்பாற்றி ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள் என பதிலளித்திருந்தார்.
இதன் போது குறுக்கிட்ட சுஜீவ, தயாசிறி இப்போதே எதிர்காலத்தைக் கணித்து விட்டதாக தெரிவித்திருந்த அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment