கொழும்பு 2, வொக்சோல் வீதியில் சஜித் பிரேமதாச தனக்கான தனியான தேர்தல் அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கான முன்னெடுப்புகளை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்தியாஸ் பாக்கீர் மார்க்காரின் தலைமையில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை முன்னெடுக்கும் அதேவேளை முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவும் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அறிவிப்பு தொடர்ந்தும் இழுபறிக்குள்ளாகியுள்ள நிலையில் தமது தரப்பு தயார்படுத்தல்களை சஜித் அணி மேற்கொண்டு வருகின்றமையும் பிரச்சார நடவடிக்கைகளைத் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment