தாமரை கோபுர நிர்மாணத்திற்காக வழங்கப்பட்ட 200 கோடி ரூபா முற்பணத்திற்கு என்ன ஆனது என்று தெரியாமல் போய்விட்டது என நேற்றைய தினம் ஜனாதிபதி தகவல் வெளியிட்டிருந்த நிலையில் அது குறித்து ஆராய ஆணைக்குழு அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார் பந்துல குணவர்தன.
சீன அரசாங்கம் இவ்விவகாரத்தைத் தெளிவுபடுத்துவர்களது அவர்களின் கடமையெனவும் தெரிவிக்கின்ற பந்துல, இந்த ஊழல் தாமதமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கிறார்.
முற்பணம் பெற்ற சீன நிறுவனம் போலியானது என ஜனாதிபதி நேற்றைய தினம் தெரிவித்திருந்த அதேவேளை, குறித்த நிறுவனம் இன்னும் இயங்குவதாக மஹிந்த தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment