இரட்டைக் குடியுரிமை உள்ள ஒரு நபராகப் புதிய ஆளடையாள அட்டையொன்றைப் பெற்றுக் கொண்டுள்ள கோட்டாபே ராஜபக்ச, தொடர்ந்தும் தனது பழைய அடையாள அட்டை இலக்கத்தைப் பாவித்து வாக்காளர் இடாப்பில் பதிந்துள்ள குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
2003ம் ஆண்டு அமெரிக்க பிரஜையாகி, 2005ல் இலங்கைக்கான பிரஜாவுரிமையையும் இரட்டைக் குடியுரிமை அடிப்படையில் பெற்றுக் கொண்டுள்ள கோட்டாபே 2016 வரை தனது பழைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதன் பின், 2016ம் ஆண்டு புதிய இரட்டைக்குடியுரிமை உள்ள நபர் என்ற அடிப்படையில் புதிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டுள்ள போதிலும் தொடர்ந்தும் வாக்காளர் பதிவுக்கு பழைய தேசிய அடையாள அட்டை இலக்கத்தையே பயன்படுத்தி வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
2016 முதல் 2018 வரையான வாக்காளர் இடாப்பிலும் 2019க்கான பதிவிலும் கூட தொடர்ந்தும் 2016ம் ஆண்டே இரத்துச் செய்யப்பட்ட பழைய அடையாள அட்டையையே அவர் உபயோகித்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இது பாரதூரமான சட்ட மீறல் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவிக்கிறது. இந்நிலையிலேயே கோட்டாபே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெரமுன வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளமையும் தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கை விட்டு விட்டதாக தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment