பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோட்டாபே ராஜபக்ச எதிர்வரும் ஒக்டோபர் 9ம் திகதி அநுராதபுரத்திலிருந்து தனது பிரச்சாரக் கூட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு ஊர்களுக்கு விஜயம் செய்து குறிப்பாக சிறுபான்மை சமூகத்தினரை சந்தித்து வரும் கோட்டாபே தன்னை அனைத்தின மக்களுக்குமான வேட்பாளர் என அறிமுகப்படுத்த முயன்று வருகிறார். எனினும், அவரது சிங்கள தேசியவாத கட்சி உறுப்பினர்கள் சிறுபான்மை சமூகத்தின் வாக்குகள் அவசியமில்லையென தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது நேரடி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் ஆரம்பமாகின்றமையும் அண்மையில் பாதுகாப்பு காரணமாக யாழ். நீதிமன்றுக்கு வர முடியாது என கோட்டா தரப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment