இலங்கையில் மாணவர்களுக்கு சர்வதேச தரத்திலான ஆங்கில கல்வியை வழங்க வேண்டும் என தெரிவிக்கிறார் சஜித் பிரேமதாச.
சுமார் 4 மில்லியன் குழந்தைகள் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்று வருவதாகவும் இவ்வாறான சூழ்நிலையில் எதிர்கால சமூகத்துக்கு உயர்ந்த தரத்தில் கல்வியை வழங்குவது அவசியம் எனவும் தெரிவிக்கும் சஜித், சர்வதேச தரத்திலான ஆங்கிலக் கல்வியையும் வழங்குவதன் ஊடாகவே இத்தலைமுறையினர் எதிர்காலத்தில் பயன்பெற உதவ முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
கண்டி, ரஜவெல்லயில் இடம்பெற்ற நிகழ்வில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Photo: Iqbal Ali
No comments:
Post a Comment