கடந்த மாதம் காலஞ்சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாலிந்த திசாநாயக்கவின் இடத்துக்கு அக்கட்சியின் சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக டி.பி ஹேரத்தே இப்பதவிக்கு நியமிக்கப்படவிருந்த போதிலும் குறித்த நபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டதையடுத்து சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதமே சாந்த பண்டார தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment