திலங்கவுக்கு 'ரெட்' கார்ட்: ஹரின் அதிரடி! - sonakar.com

Post Top Ad

Tuesday, 10 September 2019

திலங்கவுக்கு 'ரெட்' கார்ட்: ஹரின் அதிரடி!


ஸ்ரீலங்கா கிரிக்கட் அதாளபாதாளத்துக்குத் தள்ளப்பட்டிருப்பதாக இரசிகர்கள் கவலை வெளியிட்டு வரும் நிலையில் அண்மைக்காலமாக கிரிக்கட் கட்டுப்பாட்டில் ஆளுமை செலுத்தி வந்த மஹிந்த அணி நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ.



இவ்வுத்தரவின் அடிப்படையில் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிர்வாகத்தில் திலங்க எவ்விதமான பதவிகளையும் வகிக்கவோ, கூட்டங்கள், வாக்களிப்புகளில் பங்கேற்கவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கட் தரம் குறைந்தமைக்கு நிர்வாகமே காரணம் என நீண்ட காலமாக குற்றஞ்சாட்டப்பட்டு வருவதுடன் அர்ஜுன ரணதுங்க பகிரங்கமாகவே திலங்கவை சாடி வந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment