சுதந்திரக் கட்சி சார்பிலும் ஜனாதிபதி 'வேட்பாளர்' - sonakar.com

Post Top Ad

Thursday, 5 September 2019

சுதந்திரக் கட்சி சார்பிலும் ஜனாதிபதி 'வேட்பாளர்'



ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவுக்கு அக்கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



பெரமுனவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை கட்சிச் சின்னம் தொடர்பில் மஹிந்த - மைத்ரி அணிகளுக்கிடையில் முரண்பாடு தொடர்கிறது.

மொட்டுச் சின்னத்தை சுதந்திரக் கட்சியினர் நிராகரிக்கின்ற அதேவேளை ஒன்றில் கை அல்லது பொதுச் சின்னம் ஒன்றே ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் இவ்வாறு தமது கட்சி சார்பிலும் வேட்பாளரை களமிறக்கவுள்ளதாக சுதந்திரக் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment