ஜனாதிபதி தேர்தலுக்கான தேதி குறிக்கப்பட்டுள்ள நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவது குறித்து ஆராய இன்று கூடிய அமைச்சரவை எவ்வித தீர்மானமும் இன்றிக் கலைந்துள்ளது.
இச்சந்திப்புக்கு முன்பதாகவே சஜித் ஆதரவு அமைச்சர்கள் இதனை ஆட்சேபித்ததுடன் ஜனாதிபதி தேர்தல் நடந்த பின்னரே இனி இதைப் பற்றிப் பேச வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
எனினும், இது தொடர்பில் ஆராய முயற்சி இடம்பெற்ற அதேவேளை ரணில் - மைத்ரி இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவும் அரசியல் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment